ரோஜாத்தோட்டத்தை பார்க்கும்போது அழகும் மணமும் மனதை கவரும்... இறங்கி மலர்பறிக்க முயற்சி செய்கையில், அங்கே முள்ளிருப்பது தெரியவரும்.. வாழ்வை நாம் துணிந்து வாழும்போது அதிலுள்ள சவால்களும் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளும் புரியவரும்.. இறங்கி போராடுவோம்.. களம் புரியும்.. வெற்றி வரும்...
மாவீரர்களின் நினைவுகளுடன் ஓ..என் நண்பனே..! மாவீரனே..! மாற்றான் குண்டுகள் - உன் மார்பைத் துளைத்தனவோ! மாமனிதன் உன்னை மண்ணில் சாய்த்தனவோ! சிதறிய தேங்காய் போல் சில்லாகிப் போனாயோ! - அன்றி நரிகள் கையில் சிக்காது நஞ்சை நீ மென்றாயோ! சூரியக் கதிர் சமர்தனிலே சூரியன் நீ அணைந்தாயே! ஈன்றெடுத்த மண்தனிலே இரத்த விதை விதைத்தாயே! மாவீரர் சமாதியிலே மறவனாய் மலர்ந்தாயே வெளிநாட்டுத் தமிழருக்கும் வெகுட்சி வரச் செய்தாயே! வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே வேங்கையாய் பாய்ந்தவனே வேட்டை ஆட வந்தவரை வெட்டிப் புதைத்தவனே ஊர் உறவு வாழ்வதற்காய் உறங்காமல் உழைத்தவனே! உறங்காமல் உழைத்ததினால் - இன்று உறக்கத்தில் போனாயோ! மண்ணோடு நீ கலந்து மலராகிச் சிரிக்கின்றாய் விண்ணோக்கி நான் பார்த்தால் விண் மீனாய் ஒளிர்கின்றாய் வாள் ஏந்தும் வீரருக்கு வேராக நிற்கின்றாய் விடிவு தேடும் மக்களுக்கு விடிவெள்ளி நீ தானே....... மக்கள் வாழ மக்கள் வாழும் மண்ணது மீள கற்கை மறந்து தாயின் தழுவல் பொற்கை மறந்து சொந்த வீட்டுப் படுக்கை மறந்து புதுத் தளிர்க்கை மறந்து மண்ணிலே தவழ்...
உலகம்.. ஒருவர் நன்றாக சம்பாதித்தால் அவர்களை புத்திசாலியாகவும், ஒருவர் குறைவாக சம்பாதித்தால் முட்டாளாகவும், பார்க்கின்ற கூட்டமாகதான் இருக்கின்றது, எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டால் எல்லாருமே நன்றாக தான் இருப்பார்கள்! இவ்வுலகில் அப்படி ஒரு வாய்ப்பு யாருக்கும் அமையாது இது தான் உண்மை..
Comments
Post a Comment